×

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றில் கரைக்க விநாயகர் சிலைகள் ஊர்வலம்

 

கரூர், செப். 20: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டர்க்ர்குக் 286 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை முன்னிட்டு நேற்று மதியம் 2மணியளவில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கரூர் மாநகர பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 20 சிலைகள் வாங்கல் காவிரி ஆற்றில் கரைக்கும் வகையில் கரூர் 80 அடி சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றன. மேளதாளத்துடன் இந்த விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த விசர்ஜன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியளவில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 21 சிலைகள், மேளதாளத்துடன் வாகனங்களில் வைத்து ஊர்வலகமாக பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தரகம்பட்டி, தோகைமலை, வெள்ளியணை போன்ற பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மாயனூர் பகுதியிலும், வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் இந்த பகுதியை ஒட்டியுள்ள காவிரி ஆற்றிலும் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. மீதமுள்ள சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றில் கரைக்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Vinayakar ,Kaviri river ,Karur ,Karur Divatarkurk ,Vineyakar Chadurthi ,Vineyagar ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...